Connect with us

காவிக்கொடி தேசியக் கொடியாக மாறும்-அமைச்சரை கண்டித்து கர்நாடகாவில் காங்கிரஸ் தர்ணா!

காங்கிரஸ்

செய்திகள்

காவிக்கொடி தேசியக் கொடியாக மாறும்-அமைச்சரை கண்டித்து கர்நாடகாவில் காங்கிரஸ் தர்ணா!

காவிக்கொடி தேசியக் கொடியாக மாறும்-அமைச்சரை கண்டித்து கர்நாடகாவில் காங்கிரஸ் தர்ணா!

கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக பெரும் சர்ச்சைக்குரிய நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டே வருகிறது. கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதி அளித்த பின்பு தான் பெரும் பிரச்சினை நிலவி கொண்டு வருகிறது.

அதன்படி பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதி அளித்ததால் இஸ்லாமிய மாணவிகள் தங்கள் வழக்கம்போல் ஹிஜாப் அணிந்து விட்டு பாடசாலைக்கு சென்றனர். அப்போது அவர்களை ஹிஜாப் அணிய கூடாது என்று அணிந்தவர்களை வகுப்பறைக்குள் அனுமதி அளிக்காமல் அங்குள்ளோர் புறக்கணித்தனர்.

இதனால் மாணவர்களிடையே பெரும் கலவரம் நிகழ்ந்தது. கலவரத்தின் உச்ச கட்டமாக அங்குள்ள தேசியக் கொடி கம்பத்தில் காவி கொடி ஏற்றப்பட்டது. இதற்கு பலரும் வன்மையாக கண்டித்து வந்தனர்.

இந்நிலையில் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. ஏனென்றால் கர்நாடகாவின் அமைச்சர் ஈஸ்வரப்பா இது குறித்து சர்ச்சையான கருத்தை கூறியிருந்தார்.

இதனால் கர்நாடக சட்டப்பேரவையில் அமைச்சர் ஈஸ்வரப்பாவை கண்டித்து இரண்டாவது நாளாக காங்கிரஸ் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவையின் மையப்பகுதிக்கு வந்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கண்டன முழக்கம் எழுப்பினர்.

தேசத்துரோகி ஈஸ்வரப்பா பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். காவி கொடி தேசியக் கொடியாக மாறும் என்று அமைச்சர் ஈஸ்வரப்பா கூறியதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top