Connect with us

அதிர்ச்சி.!! நாளை செஸ் ஒலிம்பியாட் போட்டி-காங்கிரஸ் புறக்கணிப்பு!!

chess olympiad 2022

செய்திகள்

அதிர்ச்சி.!! நாளை செஸ் ஒலிம்பியாட் போட்டி-காங்கிரஸ் புறக்கணிப்பு!!

நாளைய தினம் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக தினமாக அமைய உள்ளது. ஏனென்றால் நாளை தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் ஒவ்வொரு நாட்டிலிருந்தும் வீரர்கள் வந்த வண்ணமாக உள்ளனர்.

இதனால் நாளைய தினம் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்ற நோக்கத்தில் நான்கு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நாளைய தினம் காங்கிரஸ் கட்சியினர் மட்டும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை புறக்கணிப்பு செய்வதாக அறிவித்துள்ளனர்.

நாளை பிரதமர் தொடங்கி வைக்க உள்ளதால் செஸ் ஒலிம்பியாட் போட்டி நிகழ்ச்சியை காங்கிரஸ் கட்சி புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. செஸ் ஒலிம்பிக் போட்டி நிகழ்வுகளை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் புறக்கணிக்கிறோம் என்று செல்வ பெருந்தொகை கூறியுள்ளார்.

புறக்கணிப்பு பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரானது தான் தவிர செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு எதிராக அல்ல என்றும் செல்வப் பெருந்தகை கூறியுள்ளார். மக்கள் விரோத, ஜனநாயக விரோத செயல்பாடுகளுக்கு ஒன்றிய அரசு துணை போவதால் புறக்கணிக்கிறோம் என்றும் காங்கிரஸ் பரப்பினர் கூறியுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top