கடந்த சில நாட்களாகவே காங்கிரஸில் இருந்து பல்வேறு முக்கிய தலைவர்கள் கட்சியில் இருந்து விலகுகின்றனர். அந்த வகையில் சில தினங்களுக்கு முன், மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் விலகியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் காங்கிரஸில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத் விலகியதை தொடர்ந்து அவரது சொந்த மாநிலமான ஜம்மு காஷ்மீரில் சுமார் 50- க்கும் மேற்பட்ட முக்கிய உறுப்பினர்களும் கட்சியில் இருந்து விலகினர்.
இந்த சூழலில் குலாம் காங்கிரஸில் இருந்து நபி ஆசாத் விரைவில் புதிய கட்சி தொடங்க இருப்பதாக கூறியுள்ளார். இவரின் விலகலானது காங்கிரஸ் கட்சியில் இழப்பாக பார்க்கப்பட்டது.
தற்போது காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவாக ஜம்மு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியில் இருந்து மேலும் 20 தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.