கிரிக்கெட்டில் இந்தியாவின் எதிர்காலம் பாதுகாப்பாக உள்ளது! வேர்ல்ட் கப் வென்ற வீரர்களுக்கு வாழ்த்துக்கள்!: மோடி

உலக கிரிக்கெட் அணிகள் அனைத்தும் இந்திய அணியை பார்த்து பயப்படும் அளவிற்கு மிகுந்த பலம் வாய்ந்த வீரர்கள் நம் இந்தியாவில் காணப்படுகிறார்கள். இதற்கு உதாரணமாக அமைந்தது அண்ட்ர் 19ன் வேர்ல்டு கப். நேற்றைய தினம் நடைபெற்ற அண்ட்ர் 19ன் வேர்ல்ட் கப் பைனலில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது.

தொடர்ச்சியாக 5வது முறையாக இந்தியன் டீம் அண்டர் 19ன் வேர்ல்ட் கப்பை வென்றது குறிப்பிடத்தக்கது. அதோடு நேற்று கடைசி ரன் எடுக்க இந்திய பேட்ஸ்மேன் சிக்ஸ் அடித்து விளாசியது 2011ஆம் ஆண்டு இந்தியா இரண்டாவது முறையாக வேர்ல்ட் கப் பெற்றது போல காணப்பட்டது.

அந்த போட்டியிலும் கடைசி ரன்னை கேப்டன் தோனி சிக்ஸ் அடித்து ஆட்டத்தை நிறைவு செய்திருப்பார். இந்த நிலையில் உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

vqp0rm9g pmmodicmmeetingaugust1

உலக கோப்பையை வென்ற இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து கூறியுள்ளார். ஜூனியர் உலக கோப்பை போட்டியில் இந்திய வீரர்கள் பெரும் துணிச்சலை வெளிப்படுத்தி உள்ளனர் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் பாதுகாப்பான, திறமையானவர்கள் கையில் உள்ளது என்பதை வீரர்களின் ஆட்டம் காட்டி உள்ளது என்றும் கூறினார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.