பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரிக்கு குவியும் திரையுலக பிரபலங்களின் வாழ்த்துக்கள்!

65ab063c463432015c7c2efc79c73ce2

பிக்பாஸ் டைட்டில் வின்னராக ஆரி தேர்வு செய்யப்பட்டார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம் இந்த நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் தற்போது சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர் என்பதும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஆரி தனது நன்றியினை தெரிவித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது 

நடிகர் சாந்தனு: உங்களை எனக்கு பதினைந்து வருடமாக தெரியும். நீங்கள் இந்த இந்த துறையில் உள்ள மிகவும் நேர்மையானவர்களில் ஒருவர். உங்களுடைய நேர்மைக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசுதான் இந்த டைட்டில் பட்டம். வாழ்த்துக்கள்

இயக்குனர் அறிவழகன்: நீங்கள் இந்த பட்டத்திற்கு மிகவும் தகுதியான ஒருவர்,. உங்களுக்கு கிடைத்த பரிசு பணத்தை விட மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள் உங்களுடைய வளர்ச்சி மென்மேலும் அடைய எனது வாழ்த்துக்கள் 

2309480b7ce7bb82f9b2398086bce8db

நடிகை ஸ்ரீபிரியா: பிக்பாஸ் வின்னர் ஆரி அவர்களுக்கும் ரன்னர் பாலாஜி அவர்களுக்கும் மற்ற அனைத்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்

சனம்ஷெட்டி: நீங்கள் டைட்டில் பட்டத்தை வென்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது. இந்த பட்டம் உங்களுக்கு மிகப்பெரிய பெருமையை கொடுக்கும் என்றும் அதுமட்டுமின்றி மில்லியன் கணக்கான இதயங்களை நீங்கள் வென்று விட்டீர்கள்

நடிகர் ஹரிஷ் கல்யாண்: பிக்பாஸ் டைட்டில் பட்டம் வென்ற ஆரிக்கு எனது வாழ்த்துக்கள். நீங்கள் மக்களின் விருப்பத்திற்குரிய ஒரு நபராக மாறி விட்டீர்கள். உங்களுடைய அடுத்த கட்ட சிறப்பான வாழ்க்கைக்கு எனது வாழ்த்துக்கள் 

திரையுலக பிரபலங்களின் இந்த வாழ்த்துக்கு ஆரி தற்போது நன்றி கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.