சோம்சேகருக்கு வாழ்த்து தெரிவித்த தாயார்: ஒரு நெகிழ்ச்சியான சந்திப்பு

8825366d70c5067ab2515b9b8118a6b7

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் யார் வெல்வார் என்று கணிக்க முடியாமல் இருந்த நிலையில் திடீரென கடைசி நான்கு சுற்றுக்களில் தலா 7 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்து விட்டார் சோம்.

இதனை அடுத்து 43 புள்ளிகள் பெற்ற அவருக்கு டிக்கெட் டு ஃபினாலே வெற்றியாளர் என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. மேலும் அவர் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார் என்றும் அறிவிக்கப்பட்டது 

b06e0c3acd8dae65007be17b5cca539f

இன்றைய அடுத்த புரோமோ வீடியோவில் இதனை கமல்ஹாசன் முறைப்படி அறிவித்து அதற்கான பதக்கத்தையும் கொடுத்தார். இதனை அடுத்து மற்ற போட்டியாளர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் 

இந்த நிலையில் டிஜிட்டல் டிவி மூலம் சோம்சேகரை அவரது தாயார் அவருக்கு வாழ்த்துக் கூறி நன்றாக விளையாடு என்று கூறினார். அப்போது இருவரும் ஒருவருக்கொருவர் ஆனந்த கண்ணீர் வடித்த நெகழ்ச்சியான காட்சிகளை கமல்ஹாசன் கண்டு ரசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிப் போட்டிக்கு 5 பேர் தகுதி பெறுவார்கள் என்ற நிலையில் இன்று ஒருவரும், நாளை ஒருவரும் வெளியேற்றப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இன்று ஷிவானி வெளியேற இருப்பதாக தகவல்கள் வந்துள்ள நிலையில் நாளை யார் வெளியேறுவார் என்றும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் அந்த ஐந்து போட்டியாளர்கள் யார் யார் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.