
பொழுதுபோக்கு
பொன்னியின் செல்வன் படத்தில் கதாப்பாத்திரம் பெயரில் குழப்பம் -விளக்கம் கொடுத்த படக்குழு!
இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் சில தினங்களின் முன் வெளியானது. வெளியான ஒரு நாளிளே 1கோடி பார்வையாளர்களை கடந்து மக்களின் மனதை இடம் பிடித்தது.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பொன்னியின் செல்வன் படத்தை ஒரே நேரத்தில் வெளியிடுகின்றனர்.
இந்த திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக ஏற்கனவே பட குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த படத்தில் நடிகர் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, நடிகை ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் பட்டாளமே பணியாற்றியுள்ளனர்.
பொன்னியின் செல்வன்’ படத்தின் ஆதித்த கரிகாலன், வந்தியத்தேவன், பழுவூர் ராணி நந்தினி,குந்தவை அருள் மொழி வர்மனின் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜெயம் ரவியின் போஸ்டர் ஆகிய கதாபாத்திரங்களின் தோற்றம் கொண்ட போஸ்டர் வெளியானது
கல்கி எழுதிய சரித்திர நாவலான ‘பொன்னியின் செல்வன்’ என்ற நாவலைத்தழுவி தான் படம் உருவாக்கியது அனைவருக்கும் தெரிந்ததே. அந்த வகையில் இந்த அறிமுகப் போஸ்டர்களில் சில எழுத்துப் பிழைகள் உள்ளதால் ‘பொன்னியின் செல்வன்’ நாவல் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளனர்.
முதலில் வெளியான விக்ரம் போஸ்டரில் ‘ஆதித்த கரிகாலன்’ என்பதற்குப் பதிலாக ‘ஆதித்ய கரிகாலன்’ என இருந்தது,விக்ரம் நெற்றியில் வெற்றித் திலகம் இருக்கும் போஸ்டர் வெளிவந்தது. இதனை நாமம் என குழப்பத்தில் இருந்தனர். அடுத்ததாக ஜெயம் ரவி போஸ்டரில் ‘அருள்மொழி வர்மன்’ என்பதற்குப் பதிலாக ‘அருண்மொழி வர்மன்’ என இருக்கிறது.
இந்நிலையில் இலக்கண விதிப்படி அருள்மொழி வர்மன் என்ற பெயரை, அருண்மொழி வர்மன் என்று எழுதுவது தான் சரி என மொழியியலாளர்கள் கூறியிருந்தனர். படத்தில் அருண் மொழியா, அருள்மொழியா என்பது குறித்து விளக்கம் அளித்து படக்குழுவினர் இன்று வீடியோ வெளியிட்டுள்ளனர்.
லிகர் படத்திற்காக கவலை பட்ட விஜய் தேவரகொண்டா அம்மா ! காரணம் தெரியுமா?
