வைகைப்புயல் வடிவேலுக்கு கொரோனா தொற்று உறுதி! தனியார் மருத்துவமனையில் அனுமதி!!

ஒவ்வொரு கதாநாயகனும் தன்னை பெரிதுபடுத்திக் காட்டி திரைத்துறையில் காண வேண்டும் என்ற முயற்சியோடு படத்தில் நடிப்பார்கள். ஆனால் தன்னைத்தானே தாழ்த்தி ஒவ்வொரு காட்சிகளிலும் நடித்து இன்று மக்களிடையே காமெடி ஜாம்பவானாக திகழ்கிறார் நடிகர் வடிவேல்.

Vadivelu

வைகைப்புயல் என்று மக்களால் அழைக்கப்படுகிறார் நடிகர் வடிவேலு. இவரின் படங்கள் தற்போது பல நாட்களாகவே வெளியாகவில்லை. ஆயினும் தற்போது வரை இணையதளத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளவர் நடிகர் வடிவேலு தான்.

ஏனென்றால் இவர் இதற்கு முன்பு நடித்த போது படத்தின் காட்சிகளும் மீம்ஸ்களாக காணப்படுகின்றன. இத்தகைய நகைச்சுவை ஜாம்பவான் வடிவேலுக்கு தற்போது ஆட்கொல்லி நோயான கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரண்டு நாட்களாக லண்டனில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் வடிவேலுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால் நடிகர் வடிவேலு சென்னை போரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment