பேரதிர்ச்சி தரும் கொரோனா-நாடாளுமன்றத்தில் 402 பேருக்கு உறுதி! ஒமைக்ரான் பாதிப்பு இருக்குமோ?

எங்கு பார்த்தாலும் கொரோனாவின் தாக்கமே அதிகமாக காணப்படுகிறது. ஏனென்றால் 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அதிதீவிரமாக பரவிய கொரோனாவின் இரண்டாவது அலையை  இந்திய அரசாங்கம் மிகக்கடினமான கட்டுப்பாட்டுக்களை அமல்படுத்தி கைக்குள் கொண்டு வந்தது.

இதனால் மக்கள் மகிழ்ச்சியாக இருந்த நிலையில் கொரோனாவின்  பாதிப்பு சரசரவென்று மீண்டும் பரவத் தொடங்கிவிட்டது. குறிப்பாக கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் மத்தியில் அதிக அளவு கொரோனாவின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு எண்ணிக்கை கடந்த 2 நாட்களில் ஒரு லட்சத்தை தாண்டி பலருக்கும் பேரதிர்ச்சியை உருவாக்கியது.

இந்த சூழலில் நாடாளுமன்றத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நாடாளுமன்ற ஊழியர்கள் 402 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற ஊழியர்கள் 1409 பேருக்கு நடைபெற்ற கொரோனா பரிசோதனையில் 402 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

நாடாளுமன்றத்தில் இந்த ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி முதல் ஜனவரி 8ஆம் தேதி வரை எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் அங்கு பணிபுரியும் 402 ஊழியர்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா உறுதியான ஊழியர்களின் மாதிரிகள் அடுத்தபடியாக ஒமைக்ரான் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது இதனால் நாடாளுமன்றத்தில் பெரும் அச்சம் உருவாகியுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று உயர கூடுமோ? என்ற கேள்வியும் அங்கு காணப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment