Connect with us

சிம்புவை உச்சத்தை தொடவைத்த ‘மாநாடு’ – ட்விட் பதிவிட்ட தயாரிப்பாளர்!!..

maanadu

பொழுதுபோக்கு

சிம்புவை உச்சத்தை தொடவைத்த ‘மாநாடு’ – ட்விட் பதிவிட்ட தயாரிப்பாளர்!!..

வெங்கட் பிரபு இயக்கத்தில் வி அவுஸ் புரொடக்சன்சின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியான படம் ‘மாநாடு’. இதில் எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் என பல முக்கிய நடிகர்கள் சிம்புவுடன் இணைந்து நடித்துள்ளனர் .

maanaadu

இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.இப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகவிருந்து பின் நவ.25-ம் தேதி வெளியானது. படம் வெளியானது முதலே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று சாதனை படைத்தது. சிம்பு நடிப்பில் நீண்ட நாட்களாக வேறெந்த படமும் வராமல் இருந்த நிலையில் மாநாடு ரிலீஸ் ஆகி ரூ.100 கோடி வசூலை பெற்றது.

தற்போது இந்தப் படம், 117 கோடி ரூபாய் வசூல் பெற்றுள்ளதாக படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சி டிவிட்டரில் அறிவித்துள்ளார்.

“இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக மாநாடு படம் அமைந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் நடிகர் சிம்பு, இயக்குநர் வெங்கட் பிரபு ஆகியோருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த போது 2019 ஆண்டு நடிகர் சரியாக தேதிகளில் படத்தின் பணிகளில் ஈடுபடத் தவறியதைக் காரணம் காட்டி சிலம்பரசனை படத்திலிருந்து நீக்கியதாக சுரேஷ் காமாட்சி அறிவித்தார்.இந்தப்படத்தில் மற்றொரு நடிகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தயாரிக்கப்படும் என தயாரிப்பாளர் கூறினார்.

அதே நேரத்தில் சிலம்பரசன் மாநாடு படத்தில் இருந்து நீக்கப்பட்ட உடனேயே மற்றொரு புதிய படத்தை தொடங்கவும் செய்தார். அதே மாதத்தில் சுரேஷ் காமாட்சியும், பல தயாரிப்பாளர்களும் சேர்ந்து சிலம்பரசனின் போக்கு குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தனர்.

டும் டும் நேரத்தை வெளியிட்ட நயன்!.. யாருலா வருவாங்க தெரியுமா?..

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top