மாவோயிஸ்டுகள் கூடாரத்தில் கைப்பற்றப்பட்ட நூற்றுக்கணக்கான ஆணுறைகள்: பெண்களிடம் அத்துமீறலா?

சத்தீஸ்கர் மாநிலத்தில் காவல்துறைக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் மாவோயிஸ்டுகள் முகாம் அடித்து நொறுக்கப்பட்டது என்பதும் இதனை அடுத்து அங்கு கைப்பற்றப்பட்ட பொருள்களில் ஏராளமான ஆணுறைகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் பல மாவோயிஸ்டுகள் இருக்கிறார்கள் என்பதும் அவ்வப்போது அவர்கள் அரசுக்கு எதிரான தீவிரவாத தாக்குதல் நடத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சத்தீஸ்கர் மாவட்டத்தில் உள்ள நபரங்பூர் என்ற பகுதியில் மாவோயிஸ்டுகள் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்தது

இதையடுத்து காவல்துறையின் தனிப்படை அதிரடியாக அந்த பகுதிக்கு நுழைந்து தாக்குதல் நடத்தியது. மாவோயிஸ்டுகள் மற்றும் காவல்துறையினர் இடையே சுமார் அரை மணி நேர தாக்குதல் நடந்ததாகவும் இந்த தாக்குதலில் மாவோயிஸ்டுகள் அடர்ந்த காட்டுப் பகுதிக்கு சென்று தப்பி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மாவோயிஸ்டுகள் முகாமில் ஏராளமான பொருட்கள் கைப்பற்றப்பட்ட நிலையில் அதில் நூற்றுக்கணக்கான ஆணுறைகள், கருத்தடை மாத்திரைகள், கர்ப்ப பரிசோதனை கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இரண்டு துப்பாக்கிகள், சில துப்பாக்கி குண்டுகள் கைப்பற்றப்பட்டதாகவும், அதுமட்டுமின்றி அரசுக்கு எதிராக துண்டு பிரசுரங்கள் பேனர்கள் ஆகியவையும் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

நூற்றுக்கணக்கான ஆணுறைகள் மாவோயிஸ்டுகள் முகாமில் கைப்பற்றப்பட்டதில் இருந்து அந்த பகுதிக்கு வரும் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதற்கு ஏராளமான ஏராளமான ஆதாரங்கள் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மாவோயிஸ்டுகள் முகாமில் நூற்றுக்கணக்கான ஆணுறைகள் கைப்பற்றப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.