கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமின்: நீதிபதி உத்தரவு!!

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெரியார் சிலை குறித்து அவதூறு பேசிய இந்துமுன்னணி நிர்வாகியும் சினிமா ஸ்டண்ட் மாஸ்டராக இருக்கும் கனல் கண்ணன் கடந்த சில தினங்களுக்கு முன் பேசி இருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஆகஸ்ட் 15ஆம் தேதி புதுச்சேரியில் கனல் கண்ணனை கைது செய்தனர்.

இதனையடுத்து அவர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்த நிலையில் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான அமர்வு இன்று நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறையினர் சார்பில் கனல் கண்ணனுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது தெரிவித்தனர்.

அப்போது பேசிய நீதிபதி தேவையற்ற கருத்துக்களை சமூக வலைதளங்களில் பேசுவது தற்போது பேஷன் ஆகி விட்டதாக வேதனையில் கருத்து தெரிவித்தார். பின்னர் கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment