நடிகர் அர்ணவிற்கு நிபந்தனை ஜாமின்: நீதிமன்றம் அதிரடி!!

சின்னத்திரை நடிகர் அர்ணவிற்கு பூந்தமல்லி நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை திவ்யா. இவரும் சின்னத்திரை நடிகர் அரணவ்வும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் 3 மாத கர்பிணியான இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நடைப்பெற்றது. இந்நிலையில் கர்ப்பிணியான தன்னை அர்ணவ் அடித்து துன்புறுத்தியதாகவும், இதனால் எந்த நேரத்திலும் தனது கரு கலையலாம் எனவும் கூறி நடிகை திவ்யா வெளியிட்ட வீடியோ சோசியல் மீடியாவில் வெளியிட்டார்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், போருர் அனைத்து மகளிர் போலீசார் அரணவ் மீது புகார் கொடுக்கப்பட்டது. இதன் பேரில் கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

அதன் பேரில் நடிகர் அர்ணவை படப்பிடிப்பு தளத்தில் கைது செய்து சிறையில் அடைததனர். தற்போது நடிகர் அர்ணவிற்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.