சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு கண்டனம்! ஒன்றிய அரசு நிரந்தர தீர்வு காண வேண்டுகோள்!!-டிடிவி தினகரன்
இன்றைய தினம் காலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. அதோடு மட்டுமல்லாமல் சமையல் எரிவாயு விலையும் உயர்த்தப்பட்டது. அதன்படி வீட்டிற்கு உபயோகப்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூபாய் 50 ரூபாய் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகிறது. இந்த நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை மீண்டும் உயர்த்த தொடங்கி இருப்பது கண்டனத்துக்குரியது என்றும் அவர் கூறினார். எரிவாயு விலை உயர்வால் நாட்டின் பொருளாதாரம் மட்டுமின்றி ஒவ்வொரு வீட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்படும் என்றும் டிடிவி தினகரன் கூறினார்.
ஒன்றிய அரசு இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என டிடிவி தினகரன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து அரசு திரும்ப பெற வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
