இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு சிறப்பு சலுகை; பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 ரூபாய் குறைப்பு! ஜார்கண்ட் முதல்வர்;

நம் நாட்டில் நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலைகள் அதிகரித்து கொண்டே உள்ளன. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். தமிழகத்தில் தற்போது பெட்ரோல் லிட்டருக்கு 100 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜார்கண்ட் மாநில அரசு இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விலை வீழ்ச்சியினை அறிவித்துள்ளது.

petrol bunk2

அதன்படி ஜார்கண்ட் மாநிலத்தில் இருசக்கர வாகனத்திற்கு மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 ரூபாய் குறைத்து உள்ளதாக அறிவித்துள்ளது. இவை 2022 ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தை முதல் இந்த அறிவிப்பு அமலுக்கு வரும் என்று ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 98.46 ஆக இப்போது இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் பாதிப்பை குறைக்க விலை குறைப்பு என்று ஹேமன் சோரன் கூறியுள்ளார். ஜார்க்கண்ட் முதல்வரின் இத்தகைய செயல் பல தரப்பு மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment