Connect with us

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை தந்த காவல்துறை அலுவலக கண்காணிப்பாளருக்கு கட்டாய ஓய்வு

large seuxal abuse c 44676

செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை தந்த காவல்துறை அலுவலக கண்காணிப்பாளருக்கு கட்டாய ஓய்வு

பெரம்பலூரில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை, விசாகா குழு விசரணையில் குற்றம் உறுதியானதால் காவல்துறை அலுவலருக்கு கட்டாய ஓய்வு வழங்கி திருச்சி சரக டி.ஐ.ஜி சரவணசுந்தர் நடவடிக்கை

பெரம்பலூர் மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் அலுவலக பிரிவில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்தவர் ஹரிகரன். இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நிலுவையிலுள்ள பணப்பலன் வழங்க விண்ணப்பித்திருந்த ஆயுதப்படை பெண் காவலர் ஒருவருக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது இது குறித்து சம்பந்தபட்ட பெண் காவலர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி சண்முகத்திடம் புகார் அளித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து ஹரிகரனை புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பணி இடமாற்றம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. ஆனால் ஹரிகரன் புதுக்கோட்டை செல்ல மறுத்ததால் துறைரீதியாக அவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தர்.

இதனிடையே பாலியல் புகாரை விசாரித்த விஷாக குழுவின் அறிக்கையில் குற்றச்சாட்டு நிரூபணம் ஆனதால் ஹரிகரனுக்கு தண்டனையாக அவருக்கு கட்டாய ஓய்வு வழங்கி நேற்று திருச்சி சரக டி.ஐ.ஜி சரவண சுந்தர் உத்தரவிட்டுள்ளார்.

பாலியல் குற்றச்சாட்டில் காவல்துறை அலுவலர் ஒருவர் கட்டாய ஓய்வுக்கு அனுப்பப்பட்ட சம்பவம் பெரம்பலூர் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top