
தமிழகம்
சென்னை பேருந்துகளில் முகக்கவசம் கட்டாயம்!! ஓட்டுனர், நடத்துனருக்கும் பொருந்தும்;
இன்றைய தினம் சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு ஒன்றினை மீண்டும் பிறப்பித்தது. ஏனென்றால் கடத்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அந்த உத்தரவு மீண்டும் சென்னையில் இன்று முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதியை மீறினால் அபராதம் 500 ரூபாயாக விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.
இந்த நிலையில் சென்னையில் பேருந்துகளில் முகக்கவசம் கட்டாயம் என்று தற்போது சென்னை மாநகராட்சி கூறியுள்ளது. சென்னையில் பேருந்துகளில் ஓட்டுநர், நடத்துனர் ஆகியோரும் கட்டாய முகக்கவசம் அணிய வேண்டும் என்று சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.
பேருந்துகளில் பயணிகள் முகக்கவசம் அணிவதை நடத்துனர் உறுதி செய்ய சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது. சென்னை மாநகர பணியாளர்கள் அனைவரும் கோவிட் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
திருமண மண்டபங்கள், வழிபாட்டுத்தலங்களில் அதிகம் கூட்டம் கூடுவதை தவிர்க்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.
திரையரங்கங்கள், திருமண மண்டபங்கள், வணிகவளாகங்கள், வழிபாட்டுத்தலங்களில் முகக்கவசம், தனிமனித இடைவெளியை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
