தனது பாடலாலும் தனது இசையாலும் மக்களை தன்வசம் இழுத்துக் கட்டிக் கொண்டவர் இசை அமைப்பாளர் கங்கை அமரன். மேலும் இவர்கள் மட்டுமின்றி பன்முக கலைஞர் நடிகர் இயக்குனர் பாடகர் என்ற பல்வேறு முகங்களை கொண்டவர். மேலும் இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்களும் சினிமா துறையில் மிகப் பெரிய நட்சத்திரமாக ஜொலித்து கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரின் மூத்த மகனான வெங்கட்பிரபு மிகப் பெரிய இயக்குனராக உள்ளார்.
மேலும் அவர் இயக்கத்தில் வெளியாகிய மங்காத்தா திரைப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. மேலும் இத்திரைப்படத்தில் கதாநாயகனாக தமிழ் சினிமாவின் தல என்று அழைக்கப்படும் நடிகர் அஜித்குமார் நடித்து இருந்தார். மேலும் இவர் இயக்கும் ஒவ்வொரு படத்திலும் இவரின் தம்பிக்கு ஏதேனும் ஒரு கதாபாத்திரத்தை வைத்து இருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இயக்கத்தில் வெளியாகிய கோவா மங்காத்தா சென்னை 600028 போன்ற திரைப்படங்களில் கதாநாயகன் ஓடு அவரின் தம்பியாகிய பிரேம்ஜி இருக்கும் மிகப்பெரிய கதாபாத்திரத்தை வைத்து இருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் நடிகர் பிரேம்ஜி பிரியாணி, வடகறி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய குடும்பத்திலேயே திரைத்துறை வைத்திருந்த இவர்கள் குடும்பத்தில் தற்போது சோகம் ஒன்று நிலவியுள்ளது. அதன்படி கங்கை அமரனின் மனைவியை மணிமேகலை உடல்நலக்குறைவால் சென்னையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு 69 வயது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது. அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது அவரது குடும்பத்தில் பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது.