திரையுலகில் 32 ஆண்டுகள் நிறைவு: ரசிகர்களுக்கு நடிகர் விக்ரம் நன்றி..!!!

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் முன்னனி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விக்ரம். இவர் கடந்த 1990-ம் ஆண்டு வெளிவந்த சேது படத்தின் மூலம் அறிமுகமானார்.

பின்னர் விண்ணுக்கும் மண்ணுக்கும், சாமி, பிதாமகன் போன்ற படங்கள் மூலம் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தது.

இதனை தொடர்ந்து தில், ஜெமினி, தூள், சாமி போன்ற படங்கள் இவருக்கு பம்பர் ஹிட் கொடுத்தது. அதோடு சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருதையும் தட்டிச்சென்றார்.

இந்த சூழலில் நடிகர் விக்ரம் திரையில் கால்பதித்து 32 ஆண்டுகள் நிறைவடைந்தது குறித்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதன் படி, இத்தனை வருடங்கள், அத்தனை கனவுகள் என பதிவிட்டுள்ளார்.

அதோடு முயற்சி இல்லையெனில் அது வெறும் முயற்சி மட்டுமே, இந்த 32 வருடத்துக்கு நன்றி என ட்வீட் செய்துள்ளது இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.