பூரண குணமடைந்தார் வைகைப்புயல் வடிவேலு! இன்று டிஸ்சார்ஜ்-மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை

உலகமெங்கும் பெரும் இன்னலை ஏற்படுத்திக்கொண்டு காணப்படுகின்ற ஒரு வைரஸ் கிருமிதான் கொரோனா. இவை அண்மைக்காலத்தில் தமிழ் திரைத் துறையினர் மத்தியில் காணப்பட்டது. அதுவும் குறிப்பாக உலக நாயகன் கமலஹாசனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

பின்னர் அவர் பூரண குணமடைந்தார். அதன் பின்னர் நடிகர் விக்ரம், ஆக்சன் கிங் அர்ஜுன் என அடுத்தடுத்து பல முன்னணி நட்சத்திரங்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு வந்தன. அவர்கள் வரிசையில் வைகைப்புயல் வடிவேலு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதன்படி அவர் படப்பிடிப்புக்காக லண்டன் சென்றிருந்தார். இரண்டு நாள் கழித்து தமிழகம் வந்த அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

vadivelu 1

இதனால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரைக் குறித்து வதந்தியான தகவல்கள் அவ்வப்போது வெளியானது. இந்த நிலையில் நடிகர் வடிவேலு கொரோனாவிலிருந்து மீண்டு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் வைகைபுயல் வடிவேலு பூரண குணமடைந்தார். குணமடைந்த நடிகர் வடிவேலு, இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment