நிறைவு பெற்றது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு-முதலிடம் பிடித்த வீரருக்கு கார் பரிசு!

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி இந்த ஆண்டு வரிசையாக நடைபெற்றுவருகிறது. ஜனவரி 12ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பிரச்சனை தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று முடிந்தது. அதிலும் குறிப்பாக மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கியது.

ஆரவாரத்தோடு ரசிகர்கள் சூழ்ந்தனர். சீறிவரும் காளையை அடக்குவதற்கு காளையர்கள் வட்டமிட்டு காத்திருந்தனர். இந்த நிலையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தற்போது நிறைவடைந்துள்ளது.

இந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 624 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் முதலிடம் பிடித்த மாடுபிடி வீரருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.

அதன்படி அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 7 சுற்றுகள் முடிவில் 24 காளைகளை அடக்கிய கார்த்திக் முதலிடம் பிடித்தார். சிறந்த மாடுபிடி வீரர் அதாவது முதலிடம் பெற்ற கார்த்திக்கிற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது. 19 காளையை அடக்கிய முருகன் இரண்டாவது இடமும், 12 காளைகளை அடக்கிய பரத் 3-வது இடமும் பிடித்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment