கமல் கட்சி பெயரை எதிர்த்து தேர்தல் ஆணையத்தில் புகார்

நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்து அதற்கு உறுப்பினர்களை சேர்க்க தீவிர முயற்சியில் உள்ளார். கழகம் என்றோ, கட்சி என்றோ முடியாமல் மய்யம் என்று முடியும் வகையில் வித்தியாசமாக கட்சியின் பெயர் வைத்த கமலுக்கு பாராட்டுக்கு குவிந்து வரும் நிலையில் இந்த கட்சியின் பெயரை தடை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு ஏழை, எளியோர், நடுத்தர மக்கள் நல சங்கம் என்ற அமைப்பு தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.

மக்கள் நீதி மன்றம் என்பது நீதிமன்றங்களை குறிக்கும் சொல் என்றும், அந்த சொல்லை கமல்ஹாசன் தனது கட்சிக்கு பெயராக வைத்துள்ளது மக்களிடையே தவறான புரிதலை ஏற்படுத்தும் என்றும் எனவே இந்த பெயருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் இந்த அமைப்பு தனது புகாரில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் கட்சியின் பெயர் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து ரசீதும் பெற்று விட்டதாக கமல்ஹாசன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இதனால் இந்த அமைப்பின் புகாரை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளுமா? என்று சந்தேகமே என அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print