நடிகை அமலா பால் அளித்த புகார்.. பவ்நிந்தர் சிங் கைது..!!!

பிரபல நடிகை அமலாபாலுக்கு துன்புறுத்தல் கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அவரது நண்பர், பட தயாரிப்பாளருமான பவ்நிந்தர் சிங் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாக்களில் பிரபல நடிகையாக இருக்கும் நடிகை அமலாபால் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளிவந்த மைனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தெய்வத்திருமகள், தலைவா, ராட்சசன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்தார். இந்த சூழலில் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக அமலாபால் காவல் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் புகார் கொடுத்திருந்தார்.

குறிப்பாக தனக்கு சொந்தமான வீட்டில் தங்கியிருந்தபோது பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதோடு தன்னுடன் இருந்த புகைப்படங்களில் சோசியல் மீடியாவில் வெளியிடுவதாக மிரட்டியதாக பவ்நிந்தர் சிங் மீது குற்றம்சாட்டியிருந்தார்.

தற்போது ஜெய்ப்பூரைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் பாவந்தர் சிங் தத் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.