போலியான ரசீதால் பல லட்சம் மோசடி, பிரபல நகை அடகு நிறுவன மேலாளர் மீது புகார்…!

சீர்காழியில் மணப்புரம் கோல்டு நிறுவனம் வாடிக்கையாளருக்கு போலியாக நகை அடகு சீட்டு வழங்கி, மேலாளர் மோசடி செய்ததாக, பெண் ஊழியர் தெரிவிக்கும் ஆடியோவால் பரபரப்பு,நகை மீட்டு தர வாடிக்கையாளர் காவல் நிலையத்தில் புகார்

கொரோனா நேரத்தில் கோடிகணக்கான ரூபாய் நகையை வாடிக்கையாளருக்கு ஏல அறிவிப்பு நோட்டீஸ் அனுப்பாமல், அனுப்பியதாக பொய் சொல்லி, ஏலம் விட்டதாக கூறி, கிலோ கணக்காண நகையை கேரளாவிற்கு கடத்தியதாக நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே மணப்புரம் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் சீர்காழி பகுதியை சேர்ந்த தமிழ்மாறன் உள்ளிட்ட 15 பேர் நகை அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளனர். அவ்வாறு நகை அடமானம் வைத்தவர்கள் தங்களது நகையை திரும்ப பெறுவதற்கு பணத்துடன் அங்கு சென்றுள்ளனர். அப்பொழுது அங்கு பணிபுரியும் மேலாளர் உங்களது பெயரில் நகை இல்லை எனவும்,அடமானம் வைத்த தொகையோடு கூடுதலாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதில் அதிர்ச்சி அடைந்த தமிழ்மாறன் இது குறித்து சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரில் கடந்த ஜூன் மாதம் 21.8 கிராம் எடை கொண்ட தங்க நகையை ரூ‌.60 ஆயிரம் திற்கு அடமானம் வைத்ததாகவும் அந்த நகையை மீட்பதற்க்கு சென்று மணப்புரம் பைனான்ஸில் பணிபுரியும் ஊழியரிடம் கேட்டால் நகை உங்களது பெயரில் இல்லை எனவும் அடமானம் வைத்த தொகையோடு  ரூ.18,200 கூடுதலாக,

அதே நிறுவனத்தில் பணியாற்றிய பெண் பணியாளர் தனலட்சுமி என்பவர் பெயரில் போலியான முகவரி கொடுத்து மாற்றி வைக்கப்பட்டுள்ளதாகவும் மொத்தம் 78 ஆயிரத்து 200 ரூபாய் கொடுத்தால் நகையை திருப்பி தருவதாக பணியில் இருப்பவர்கள் கூறுவதாகவும் இது குறித்து விசாரணை செய்து எனது நகையை மீட்டு தரும்படி புகார் மனுவில் தெரிவித்துள்ளார் மேலும் வாடிக்கையாளரிடம் உங்க நகையை மேலாளர் தெரிவித்தன் பெயரில் தான் நகை என் பெயரில் வைத்துள்ளதாக பெண் பணியாளர் தெரிவிக்கும் செல்போன் ஆடியோவும் வெளியாகி பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது,

மேலும் கொரோனா காலத்தில் மக்கள் வீடுகளில் முடங்கிய நேரத்தில் மணப்புரம் நிறுவனத்தில் நகை அடகு வைத்த பல கோடிக்கணக்காண ரூபாய் மதிப்புள்ள நகைக்கு, வாடிக்கையாளருக்கு ஏல நோட்டிஸ் தபால் போட்டதாக கூறி அதற்கான வட்டி கட்ட வில்லை என பொய்யான தகவலை தெரிவித்து மணப்புரம் நிறுவனத்தின் தலைமை அலுவலகமான கேரளாவில் இயங்கி வருகிறது இதன் கிளைகள் தழிழ்நாடு முழுவதுமாக இயங்கி வருகிறது கொரோனா காலத்தை பயன்படுத்தி கிலோ கணக்காண நகையை கேரளாவிற்கு கடத்தி மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment