வலிமை படத்திற்கு சிக்கல்… கமிஷனர் அலுவலத்தில் பரபரப்பு புகார்!

‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தொடர்ந்து ஹெச். வினோத் – அஜித் – போனிகபூர் மீண்டும் கூட்டணி அமைத்த திரைப்படம் வலிமை. யுவன் இசையில் பாடல்களும், ஜிப்ரான் பின்னணி இசையும் அமைத்துள்ளார். அஜித் குமாருடன் இணைந்து ஹிமா குரேஷி, கார்த்திகேயா, புகழ் என பலர் நடித்து இருக்கிறார்கள்.2 வருட காத்திருப்புக்கு பிறகு படம் வெளியாகியுள்ள நிலையில், தற்போதுவரை கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

ரசிகர்கள் மட்டுமே படத்தை தலைக்கு தூக்கிவைத்து கொண்டாடி வருகின்றனர். இருப்பினும் உலகம் முழுவதும் வலிமை திரைப்படம் வெளியான தியேட்டர்களில் கலெக்‌ஷன் கல்லாகட்டுவதாக தகவல்கள் வெளியாகின்றன.

நேர்மையான போலீஸ் அதிகாரியாக அஜித் நடிப்பி மிரட்டி இருப்பதாகவும், சண்டை காட்சிகள் மிரள வைக்கும் படி காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இந்நிலையில் வலிமை படம் குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது அஜித் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வலிமை திரைப்படத்தில் வழக்கறிஞர்கள் குறித்து தவறாக சித்தரித்து காட்சிப்படுத்திய அத்திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment