வாங்காத பொருள்களுக்கும் மெசேஜ் வருவதாக புகார்!!-அமைச்சர் ஆக்சன்;

இந்தியாவிலேயே நெல்பயிர் உற்பத்தியில் முதலிடத்தில் நம் தமிழகம் தான் உள்ளது. நெல் சாகுபடியை மையமாகக் கொண்டு ஏராளமான டெல்டா மாவட்டங்கள் விவசாயம் செய்கின்றனர்.

ஆயினும் அந்த அளவிற்கு நெல் பாதுகாப்பு சேமிப்பு கிடங்குகள் இல்லை. தற்போது நம் தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கிவிட்டது என்பதால் நெல் சேமிப்பு கிடங்குகள் கட்டாயம் கட்டப்பட வேண்டும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.

மேலும் இதுகுறித்து அமைச்சர் சக்கராபாணி சில முக்கிய அறிவிப்பினை கூறியுள்ளார். அதன்படி கடந்த ஆட்சி போன்று செண்டிங் டெண்டர் முறை இல்லாமல் ஓபன் டெண்டர் விடப்படுகிறது என்று கூறியுள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளில் நெல் சேமிப்பு கிடங்குகள் என்று ஒன்றுகூட கட்டப்படவில்லை என்றும் அமைச்சர் சக்கராபாணி கூறினார்.

வாங்காத பொருள்களுக்கும் குறுஞ்செய்தி வருவதாக புகார் வந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சக்கரபாணி கூறினார். பனை வெல்லம் கொள்முதல் தொடர்பாக கொள்கை முடிவு எடுக்கப்படும் என்று உணவு நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment