துரைமுருகன் தெளிவான விளக்கம் தராமல் குறை கூறுவதா? ஓபிஎஸ்;

நேற்றைய தினம் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் பெரியசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் முல்லை பெரியாறு அணையை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 138.50 அடியை கடந்த நிலையில் தமிழக அமைச்சர்கள் முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு செய்தனர்.துரைமுருகன்

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி அளித்தார்.அதன்படி கடந்த 10 ஆண்டுகளில் எந்த அமைச்சரும் முல்லைப் பெரியாறு அணையை நேரில் வந்து ஆய்வு செய்யவில்லை என்று கூறினார். அதோடு மட்டுமல்லாமல் அதிமுகவினை சேர்ந்த அமைச்சர்களையும் நேற்றைய தினம் வன்மையாக கண்டித்து இருந்தார்.

இதுகுறித்து தற்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் பதிலடி கொடுக்கும் என கூறியுள்ளார். அதன்படி முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் திறக்கப்பட்டது பற்றி விளக்கம் தராமல் அதிமுகவை பற்றி குறை கூறுகிறார் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் என்று கூறியுள்ளார்.

தெளிவான பதில் தராமல் நதிநீர் உரிமையை நிலைநாட்டிய அதிமுகவை குறை கூறுவது கண்டிக்கத்தக்கது என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் பதிலடி கொடுத்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment