வெடிக்கும் சசிகலா-ஜெயக்குமார் போர்! போலீசில் புகார் அளித்த ஜெயகுமார்!!

தமிழகத்தில் எதிர்க்கட்சியான அதிமுக கட்சியில் பல்வேறு விதமான குழப்பங்கள் நாள்தோறும் காணப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக அதிமுக  பொன்விழா கொண்டாடியது.

ஜெயக்குமார் இந்த பொன்விழாவில் பலர் எதிர்பாராதவிதமாக மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் தோழி சசிகலா அதிமுக கொடியுடன் கூடிய காரில் சென்று ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

இதற்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார். இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தற்போது சசிகலா மீது புகார் அளித்துள்ளார்.

அதிமுக பொது செயலாளர் என கல்வெட்டு திறப்பு குறித்து சசிகலா மீது காவல்நிலையத்தில் அதிமுக தரப்பினர் புகார் அளித்துள்ளனர். சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் அளித்துள்ளார்.

எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் அதிமுக பொது செயலாளர் சசிகலா என பொன்விழா அக்டோபர் 17ஆம் தேதி கல்வெட்டு திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.இதனால் கடந்த சில நாட்களாகவே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கும் சசிகலாவுக்கும் இடையே கடும் முரண்பாடு உள்ளது தெரியவந்துள்ளது.இதனால் அதிமுக தொண்டர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment