Connect with us

நிலா சோறு சாப்பிட்ட போட்டியாளர்கள்!!

Entertainment

நிலா சோறு சாப்பிட்ட போட்டியாளர்கள்!!

பிக் பாஸ் நிகழ்ச்சி வார இறுதிக்குப் பின் ஏதாவது மாற்றம் ஏற்படும் இருந்த பார்வையாளர்களுக்கு கிடைத்தது ஏமாற்றமே ஆகும், லாஸ்லியாவும் கவினும் யார்னாலும் என்ன்னாலும் சொல்லிக்கோங்க, ஒரு வாட்டி முடிவெடுத்துட்டா எங்க பேச்சை நாங்களே கேக்கமாட்டோம் அப்டிங்கற பாணியில சுத்திட்டு இருக்காங்க.

நேற்றைய நிகழ்ச்சியானது அதன் முந்தைய தின நிகழ்ச்சியின் தொடர்ச்சியாகத் துவங்கியது. ஒரு வழியாக அது முடிவடைய,  இந்த வாரத்திற்கான டாஸ்க் தொடங்கியது, இந்த டாஸ்க்குக்காக போட்டியாளர்கள் இரு கிராமங்களாக பிரிக்கப்பட்டனர். 

fdf4255f89b425e56b4fe519512b34c3

இதில், சாண்டி, முகென், லோஸ்லியா, வனிதா ஆகியோர் ஒரு குடும்பமாகவும், கவின், சேரன், தர்ஷன், ஷெரின் ஆகியோர் ஒரு குடும்பமாகவும் பிரிக்கப்பட்டனர்.

இந்த டாஸ்க்கில் போட்டியாளர்களுக்கு நாட்டுப்புற கலைகள் கற்றுக்கொடுக்கப்பட்டது. இதனைக் கற்பித்தவர் பொம்மலாட்டக் கலைஞர் காளீஸ்வரன் ஆவார்.

அதன் பிறகு டமுக்கு டக்கா டமுக்கு டக்கா டக்கா டக்கா என்ற பொம்மலாட்டப் பாடல் கற்றுக் கொடுக்கப்பட்டது. இதனை தினமும் மாலை நேரத்தில் கிராமத்தினர் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டது. 

சேரன் கிராமத்தினர் மது ஒழிப்போம் என்பது பற்றியும், வனிதா கிராமத்தினர் கூட்டுக் குடும்பம் பற்றியும் பொம்மலாட்டம் நிகழ்ச்சியை செய்தனர். இதில், வனிதா, முகென், லோஸ்லியா, சாண்டி ஆகியோர் மிகச் சிறப்பாக செய்து வெற்றி பெற்றனர். 

 
அதன் பிறகு 2 கிராமத்தினரும் நிலா சோறு சாப்பிட்டனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top