Connect with us

தர்சனின் தாயார் பிறந்தநாளை கொண்டாடிய போட்டியாளர்கள்!!

Entertainment

தர்சனின் தாயார் பிறந்தநாளை கொண்டாடிய போட்டியாளர்கள்!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி இன்னும் 100 வது நாளை நெருங்கிக் கொண்டிருக்கிறது, இறுதியை நெருங்க நெருங்க போட்டியாளர்களுக்குள் பாசம் அதிகரிக்கவே செய்கிறது.

பிக் பாஸீம் போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க ஆரம்பித்துவிட்டார், ஒவ்வொரு போட்டியாளரின் குடும்பத்தில் இருந்தும், குடும்ப உறுப்பினர்கள் வர ஆரம்பித்துவிட்டனர்.

6b8e794578dd2b3b4b77cd3fa03961d8-2

2 நாட்களுக்கு முன்னதாக முகினின் தாயாரும், தங்கையும் வந்து சென்றனர், அதன்பின்னர் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் லோஸ்லியாவின் அப்பா மரியநேசன், அம்மா மேரி, இரு தங்கைகள் ஆகியோர் வந்தனர்.

நேற்றைய நிகழ்ச்சியில் யார் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் “காலையில் தினமும் கண்விழித்தால்” பாடல் ஒளிபரப்பானது. அனைவரும் ஃப்ரீசான நிலையில் எட்டிப் பார்க்க தர்ஷனின் அம்மா ஷியாமலா மற்றும் தர்ஷனின் சகோதரி துஷாரா ஆகியோர் வந்தனர்.

அவர்களைப் பார்த்த மகிழ்ச்சியில் தர்சன் ஓடிச் சென்று, கட்டியணைத்து முத்தம் கொடுத்தார்.

அதன்பின்னர் அனைத்து போட்டியாளர்களிடமும் நன்கு பேசிக் கொண்டிருந்தனர் இவர்கள் இருவரும், அப்போது சாண்டி ஷியாமலாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள் கூறி மகிழ்ச்சிக்கு ஆளாக்கினார்.

கைவினைப் பொருட்கள் செய்து கொடுத்து அனைவரையும் அசத்தும் முகின், நேற்று தர்சனின் தாயாருக்கும் பிறந்த நாள் பரிசு தயாரித்துக் கொண்டிருந்தார்.

பிக் பாஸ் பிறந்தநாள் கேக் அனுப்பி வைத்து தர்சனின் தாயாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அதன்பின்னர்  தர்சனின் அம்மா தன்னுடைய பிறந்த நாளை பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களுடன் கொண்டாடினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top