உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு குழப்பம்! கட்சித் தலைவருக்கு நோட்டீஸ்!!

கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கட்சி அமோக வெற்றி பெற்றது. அந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கட்சியானது உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு இருந்தது. இந்த நிலையில் அதே சட்டமன்றத் தேர்தலில் மற்றொரு கட்சியும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது தெரியவந்துள்ளது.மனிதநேய மக்கள் கட்சி

இதுகுறித்து தற்போது உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கட்சியின் தலைவருக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதன்படி சட்டமன்ற தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது எதிர்த்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இதனால் மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் சமதுவுக்கு சென்னை  உரிமையியல் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வேறு கட்சி சின்னத்தில் போட்டியிட்ட இருவரும் கட்சியில் உறுப்பினராக தொடர தடை கோரி மனிதநேய மக்கள் கட்சி இளைஞர் அணி செயலாளர் வழக்கு தொடுத்துள்ளார்.

மனிதநேய மக்கள் கட்சி விதிப்படி வேறு சின்னத்தில் போட்டியிட கூடாது .ஆனால் இவர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதால் அவர்கள் மீது வழக்கு தொடுக்கபட்டதாக காணப்படுகிறது. இதனை மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.இதனால் கட்சியின் விதியை மீறிய அந்த இரண்டு வேட்பாளர்கள் நீக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment