கம்பி கட்ற கதை எல்லாம் சொல்றாங்க.. தமிழகத்தின் அலங்கார ஊர்தியை நிராகரித்தது குறித்த மத்திய அரசின் விளக்கத்தைச் சாடிய கம்யூனிஸ்ட் கட்சியினர்!
ஜனவரி 26 ஆம் தேதி 75 வது ஆண்டு குடியரசு தினம் இந்தியாவில் கொண்டாடப்பட உள்ளது. இந்தக் கொண்டாடத்திற்கு இந்தியா தயாராகி வரும் நிலையில் குடியரசி தின அலங்கார அணிவகுப்புக்காக இந்தியா 75 என்ற தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
அந்தத் தலைப்பின்படி ஒவ்வொரு மாநிலங்களும் அலங்கார ஊர்திகளைத் தயார் செய்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த அலங்கார ஊர்திக்கு டெல்லியில் நிராகரிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து பாண்டிச்சேரியைச் சார்ந்த தமிழ் அறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக அரசின் அலங்கார ஊர்தியை அனுமதிக்கக் கோரிய தமிழக முதல்வர் ஸ்டாலினின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறுகையில், “குடியரசு தின நாளில் மத்திய அரசு திட்டமிட்டே தமிழகம், கேரளா, மேற்குவங்காளம் போன்ற மாநிலங்களின் ஊர்திகளை புறக்கணித்து உள்ளது.
தமிழகத்தை சேர்ந்த மகாகவி பாரதி, வ.உ.சி, வேலுநாச்சியார் ஆகியோர் கொண்ட அலங்கார ஊர்தியை நிராகரித்ததுடன் மகாகவி பாரதி, வ.உ.சி., வேலு நாச்சியார் ஆகியோரை வெளிநாட்டினர்களுக்கு தெரியாது என்று மத்திய அரசு கொடுத்த விளக்கம் வினோதமாக உள்ளது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
