இதுவரை ஆறு பதக்கம்; ஆறாவது இடம், ஆச்சரியப்படும் பிற நாடுகள்!!

இங்கிலாந்து நாட்டில் தற்போது காமன்வெல்த் போட்டி நடைபெற்று கொண்டு வருகிறது. இந்த காமன்வெல்த் போட்டியில் முதல்முறையாக கிரிக்கெட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி சர்வதேச மகளிர் டி20 போட்டி காமன்வெலத்தில் நடைபெற்று கொண்டு வருகிறது.

இதில் இந்தியா, ஆஸ்திரேலியா அணியுடன் மோதியது. மேலும் பாகிஸ்தான் அணியுடன் மோதி வெற்றியினை பெற்றுள்ளது. இந்த நிலையில் காமன்வெல்த் போட்டியில் தொடர்ந்து இந்தியாவிற்கு பதக்கங்கள் கிடைத்துக் கொண்டு வருகின்றன.

அதிலும் குறிப்பாக இந்தியாவுக்கு தற்போது மூன்றாவது தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. இந்த தங்கப்பதக்கமும் பளு தூக்குதல் போட்டியில் கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன்படி பளு தூக்குதலில் 73 கிலோ எடை பிரிவில் அஜந்தா ஜியுளி தங்க பதக்கத்தை வென்று அபாரம் காட்டினார்.

இதனால் இந்தியா 3 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கல பதக்கத்துடன் பதக்க பட்டியலில் ஆறாவது இடத்தில் ஜொலித்துக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் இத்தகைய வெற்றி பிற நாடுகளுக்கு மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்துக் கொண்டு வருகிறது.

ஏனென்றால் பளு தூக்குதலில் பிரிவில் தொடர்ந்து இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்கம் வெள்ளி பதக்கங்களை வாரி பெற்றுக் கொண்டு வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.