காமன்வெல்த் போட்டி: டேபிள் டென்னிசில் இந்திய மகளிர் அணி இரண்டாவது வெற்றி!!

நம் தமிழகத்தில் உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று கொண்டு வருகிறது. இந்த சமயம் அனைவரின் பார்வையும் தமிழகம் பக்கமே திரும்பி உள்ளது. ஆயினும் இங்கிலாந்து நாட்டில் காமன்வெல்த் போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு வருகிறது.

இந்த காமன்வெல்த் போட்டியில் முதல் முறையாக கிரிக்கெட் விளையாட்டும் இடம் பெற்றுள்ளன. இந்த நிலையில் இன்று இந்தியாவிற்கு தொடர்ந்து தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்கள் கிடைத்தது.

அதன்படி பழுத்துக்குதல் போட்டியில் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கம் இன்று ஒரே நாளில் கிடைத்தன. இந்த நிலையில் தற்போது டேபிள் டென்னிஸ் போட்டியில் மகளிர் அணி இரண்டாம் வெற்றியை பதிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

டேபிள் டென்னிஸ் இரண்டாவது போட்டியில் கயானாவை மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வீழ்த்தியது இந்திய மகளிர் அணி. இதனால் இன்றைய தினம் விளையாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து இந்தியா தனது ஆதிக்கத்தினை காட்டிக்கொண்டு வருகிறது.

மேலும் ஒலிம்பியாட் போட்டியிலும் தொடர்ந்து இந்திய அணி வெற்றி பெற்றுக் கொண்டு வருவது என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.