
விளையாட்டு
காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்..!!!
72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் போட்டியானது இங்கிலாந்து நாட்டில் கடந்த சில தினங்களுக்கு முன் தொடங்கி, தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியா இப்போட்டிகளில் தனது ஆபார பங்களிப்பை காட்டிவருகிறது.
அந்த வகையில் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் விதமாக வீரர்கள் பதக்கங்களை குவித்து வருகின்றனர். 13 பதக்கங்களை வென்று உலக நாடுகள் வரிசையில் இந்தியா ஆறாவது இடத்தை பிடித்துள்ளது.
இந்த சூழலில் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் பளுதூக்கும் வீரரான லவ்ப்ரீத் சிங் மேலும் ஒரு பதக்கம் வென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக 109 கிலோ எடைப்பிரிவில் வெற்றிப்பெற்று வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார். மேலும், 5 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கல பதக்கங்களை இந்தியா பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
