பெரியசாமி தலைமையில் அமைச்சர்கள் குழு! டெல்டா மாவட்டங்களில் ஆய்வு; ஸ்டாலின் அதிரடி உத்தரவு!!

சில நாட்களாக தமிழகத்தில் தொடர் கனமழை பெய்கிறது. டெல்டா மாவட்டங்களிலும் இந்த மழையின் காரணமாக பெரும் பாதிப்புகள் உருவாகியுள்ளது. இந்த நிலையில் டெல்டாவில் பயிர்களை கணக்கிட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்டாலின்

இது குறித்து செய்தி அறிக்கை வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாக தமிழ் நாட்டின் பல பகுதிகளில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் பரவலாக  பெய்து வரும் கனமழை காரணமாக பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன.

இது குறித்து ஆய்வு செய்து தற்போது பயிர்களை காப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவும், பயிர் சேத விவரங்களை அறியவும் அமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்றினை கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி தலைமையில் அமைக்க தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்த குழுவில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

உடனடியாக டெல்டா மாவட்டங்களுக்கு சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்த ஏதுவாக முதல்வருக்கு அறிக்கை தர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment