தமிழகத்தில் தற்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெறுகிறது. இந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் 38 மாவட்டங்களுக்கு ஏற்ப மொத்தம் முப்பத்தி எட்டு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தங்கள் துறைகளில் மிகவும் சிறந்தவர்களாக காணப்படுகின்றனர்.
அவர்களில் குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக திமுக எம்எல்ஏ சேகர்பாபு நியமிக்கப்பட்டுள்ளார். சேகர்பாபு தினம்தோறும் கோவில் சம்பந்தப்பட்ட அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டே வருகிறார். இந்த நிலையில் அவரின் திறமைக்கு ஏற்ப கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி தமிழகத்தின் முதலமைச்சர் தலைமையில் பக்தர்களின் வசதியை மேம்படுத்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவை கோவில்களில் பராமரிப்பை செம்மைப் படுத்தவும், பக்தர்களின் வசதியை மேம்படுத்தவும் முதலமைச்சரின் தலைமையில் குழுவாக உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் 17 பேர் கொண்ட குழுவின் தலைவராக தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் செயல்படுவார். இந்த குழுவின் துணைத் தலைவராக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நியமிக்கப்பட்டுள்ளார். இந்த குழுவில் உறுப்பினர்களாக குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சுகிசிவம், கருமுத்து கண்ணன், ராமசுப்பிரமணியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.