ஆணையம் கூறிய அதிர்ச்சி தகவல்.. ஜெயலலிதா மரணத்தில் திடீர் திருப்பம்..!!

கடந்த 2017-ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணமானது இன்று வரையில் மர்மமாக இருந்து வருகிறது. இந்நிலையில் முதலமைச்சரின் மரணம் குறித்து விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்ட நிலையில், தற்போது ஆணையம் அறிக்கை சமர்பித்து உள்ளது.

இந்த சூழலில் ஜெயலலிதாவின் சிகிச்சையின்போது சசிகலா மட்டுமே சென்றதாகவும், மற்றவர்கள் யாரும் செல்லவில்லை என ஆணையம் தெரிவித்துள்ளது. அதே போல் சசிகலாவின் உறவினர்களாக 15 பேர் ஆணையத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் சசிகலாவுடன் கலந்து ஆலோசிக்கப்பட்ட பிறகுதான், சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 4.12.2016-ம் தேதியில் அன்று மாலை 3 மணியில் இருந்து 3.50 மணிக்குள் இறந்திருப்பதாக தெரியவந்துள்ளது. அதே சமயம் 5.12.2016 அன்ரு இரவு 11.30 மணிக்கு இறந்தாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அப்பல்லோ மருத்துவமனையில் அரசு மற்றும் காவல் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் படியே சிசிடிவி கேமிராக்கள் செயலிழக்க செய்யப்பட்டுள்ளதாக ஆறுமுகசாமி ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment