Connect with us

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு! உணவு பார்சல்களின் விலை குறையுமா?

commerical gas

தமிழகம்

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு! உணவு பார்சல்களின் விலை குறையுமா?

மார்ச் மாத இறுதியில் திடீரென்று சமையல் எரிவாயுவின் விலை சற்று அதிகரித்தது. அதிலும் குறிப்பாக வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலை 250 ரூபாய் வரை உயர்ந்தது.

இதனால் பல இடங்களில் உணவு பார்சல்கள் விலையும் அதிகரித்தது. மேலும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் சென்னையில் உள்ள அனைத்து டீக்கடைகளிலும் டீ ரூபாய் 12க்கும், காபி ரூபாய் 15-க்கும் விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

எனவே பல இடங்களில் இந்த விலை உயர்வுக்கு எதிராக நூதனப் போராட்டங்களும் நடைபெற்றன. அதன் பின்பு ஓரளவிற்கு வணிக பயன்பாட்டிற்கான காஸ் சிலிண்டர் விலை குறைந்தது.

இந்த நிலையில் ஆகஸ்ட் பிறந்தவுடன் வணிக கேஸ் சிலிண்டரின் விலை திடீரென்று வீழ்ச்சி அடைந்துள்ளது. அதன்படி சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டரின் விலை ரூபாய் 36.50 குறைந்துள்ளது.

ஜூலை 6ஆம் தேதியில் 2177.50 ஆக இருந்த 19 கிலோ எடை சிலிண்டர் விலை தற்போது 2041 ஆக குறைந்துள்ளது. வீட்டு உபயோகத்திற்கான மானிய சிலிண்டர் விலை எந்த மாற்றமும் இன்றி 1068. 50 ஆகவே நீடிக்கிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top