சிலிண்டர் விலை அதிரடியாக உயர்வு: இருப்பினும் பொதுமக்கள் ஆறுதல்!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினந்தோறும் உயர்ந்து வருவதை போலவே ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று சமையல் கேஸ் சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்றும் சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ஆனால் அதே நேரத்தில் வணிக பயன்பாட்டிற்காக சிலிண்டர் விலை மட்டுமே உயர்ந்துள்ளதாகவும் வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலை உயர்வு இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

வணிக பயன்பாட்டிற்கு விலை ரூபாய் 268 உயர்ந்ததை அடுத்து வணிகபயன்பாட்டிற்கான 19 கிலோ சிலிண்டர் விலை ரூபாய் 2133 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனால் வணிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தாலும் வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலை உயரவில்லை என்பது இல்லத்தரசிகளுக்கு நிம்மதியான ஒரு செய்தி என்பது குறிப்பிடத்தக்கது

வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலை ரூபாய் 915/50 என்ற விலையிலேயே விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment