வர்த்தக சிலிண்டர் விலை அதிரடி குறைவு: எவ்வளவு தெரியுமா?

சர்வதேச அளவில் கச்சா எண்ணெயில் ஏற்படும் மாற்றங்களின் மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பினை பொறுத்து ஒவ்வொரு மாதமும் எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை மாற்றி அமைப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

அந்த வகையில் இன்றைய தினத்தில் வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 96 ரூபாய் குறைந்தது 2,045 ரூபாய்க்கு விற்பனையாகும் என எண்ணெய் நிறுவனர்கள் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் வர்த்தக சிலிண்டரின் விலையினை பொருத்தவரையில் இதற்கு முன்னர் ரூ. 2,300 வரையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதன் பின்னர் அடுத்தடுத்து விலை குறைவு சந்தித்து தற்போது ரூ. 2,045 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

அதே போல் வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றம் இல்லாமல் காணப்படுகிறது. அதன் படி, ரூ.1068.50 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. குறிப்பாக வீட்டு உபயோக சிலிண்டர் விலை, ஜூலை மாதத்தில் இருந்து மாற்றம் இன்றி ஒரே விலையில் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment