தமிழ் சினிமாவில் குழந்தை நடிகராக அறிமுகமானவர் விஜய். இவர் தமிழ் திரைப்படத் துறையில் முதன்மை நடிகர்களுள் ஒருவராகக் காணப்பட்டு ரசிகர்களால் “தளபதி” என்று அழைக்கிறார்கள். இவர் சமீபத்தில் நடித்த மாஸ்டர் திரைப்படமான வசூல் ரீதியில் பட்டைய கிளப்பியது.
இப்படத்தினை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே மற்றும் யோகி பாபு, செல்வராகவன் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தில் இருந்து முதல் பாடலான ‘அரபிக்குத்து’ பாடல் காதலர் தினத்தில் வெளியாகி சோசியல் மீடியாவில் களக்கியது மட்டுமில்லாமல் யூடியூப்பிலும் மிக பெரிய சாதனை படைத்தது.
இதனையடுத்து அனிருத் இசையமைப்பில் தளபதி பாடியிருக்கும் ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ம் தேதி திரையரங்கில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்தையடுத்து தற்சமயம் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகும் என சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.