இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் கிடையாது!!!

தமிழகத்தில் தற்போது கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.தடுப்பூசி

மேலும் தமிழகத்தில் சில வாரங்களாகவே தொடர்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மெகா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு வரும்.மெகா தடுப்பூசி முகாம்

இதனால் அரசு ஊழியர்கள் பலரும் ஞாயிற்றுக்கிழமையும் வேலை பார்க்கும் நிலையில் சில வாரங்களாக காணப்பட்டது. இந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கு தற்போது சந்தோஷம் அளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

மெகா தடுப்பூசி முகாம் அதன்படி அக்டோபர் 17-ஆம் தேதி ஆகிய வரும் ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் இல்லை என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் தமிழகத்தில் தற்போது சுகாதாரத்துறை அமைச்சராக உள்ள மா சுப்பிரமணியன் இதை அறிவித்துள்ளார்.

சுப்பிரமணியன்மேலும் அவர் கூறியுள்ளார், “இந்த வாரம் பண்டிகை காலம் என்பதால் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது” என்று அவர் கூறியுள்ளார் .

அதோடு மட்டுமில்லாமல் குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடப்படுவது குறித்தும் சில அறிவிப்புகளை கூறியுள்ளார்.மேலும் அனுமதி கிடைத்ததும் இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் பணி துவக்கப்படும் என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment