Connect with us

வருகின்ற ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம்!!-அமைச்சர்;

தடுப்பூசி

தமிழகம்

வருகின்ற ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம்!!-அமைச்சர்;

சமீப காலமாக இந்தியாவில் பரவலாக பேசப்படும் வார்த்தையாக மாறி உள்ளது குரங்கு அம்மை. இந்த நோயானது மேற்கத்திய நாடுகளில் அதி தீவிரமாக பரவிக் கொண்டு வருகிறது. நம் இந்தியாவில் கேரள மாநிலத்தில் ஒன்று, இரண்டு அடுத்தடுத்து பதிவாகி வருவதால் தமிழகத்திலும் பரவுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது போல் தெரிகிறது.

இதனால் தமிழக மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோயம்புத்தூரில் குரங்கு அம்மை விழிப்புணர்வு குறித்து ஆலோசனை ஆய்வு மேற்கொண்டார். ஏனென்றால் கேரளாவிற்கு மிகவும் அருகாமையில் கோயம்புத்தூர் உள்ளதால் முதற்கட்ட நடவடிக்கையாக அங்கு எடுக்கப்பட்டது.

அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி தமிழ்நாட்டில் வரும் ஞாயிற்றுக்கிழமை 24ஆம் தேதி மெகா கொரோனா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

இந்த தடுப்பூசி முகாம்கள் தமிழகம் முழுவதும் சுமார் 50,000 மையங்களில் அமைக்கப்படும் என்றும் கூறினார். மேலும் குரங்கு அம்மை நோயை கண்டறிய பன்னாட்டு விமான நிலையங்கள் அமைந்திருக்கும் நகரங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top