தமிழகத்தில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 50000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்!

கண்ணுக்கு தெரியாமல் மக்களுக்கு மிகப்பெரிய அச்சத்தை உருவாக்கி கொண்டிருந்தன வைரஸ் கிருமி கொரோனா.இந்தியாவின் பெரும் முயற்சியால் இந்த கொரோனா நோய் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

மெகா தடுப்பூசி முகாம்

அதோடு மட்டுமில்லாமல் இந்தியா 100 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பு ஊசியை செலுத்தி உலக நாடுகளை திரும்பிப் பார்க்கும் அளவிற்கு சாதனை புரிந்துள்ளது. இத்தகைய சாதனை பிரிவதற்கு பெரும் உதவிகரமாக அமைந்தது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்.

நம் தமிழகத்தில் முதலில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கொரோனா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.ஆனால் அசைவப் பிரியர்களின் கோரிக்கையை ஏற்று  தடுப்பூசி முகாம் சனிக்கிழமை மாற்றப்பட்டது.

சுப்பிரமணியன்

இந்த நிலையில் கடந்த வாரம் சனிக்கிழமை கொரோனா  தடுப்பூசி முகாம் அமைக்கப்படவில்லை தற்போது சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நாளை மறுநாள் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது பற்றி சில அறிவிப்புகளை கூறியுள்ளார்.

வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளது என்றும் கூறியுள்ளார். இரண்டாம் தவணை செலுத்த வேண்டிய 70 லட்சம் பேரும் நாளை மறுநாள் நடைபெறும் முகாமில் தடுப்பூசி போட அழைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை 71 சதவீதத்தில் இருந்து 72 சதவீதமாக உயர்ந்துள்ளது. இல்லம் தேடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நாளொன்றுக்கு 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்டுக் கொண்டு வரப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment