புதுச்சேரியில் விரைவில் மருத்துவப் பல்கலைக்கழகம்: என்.ரங்கசாமி..
புதுச்சேரியில் மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக முதல்வர் என். ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் தொழில்நுட்ப பல்கலைகழகங்களில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பட்டங்களை வழங்கினார்.
பின்னர் பேசிய அவர் பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்கள் நிறப்படும் என கூறினார்.
இந்த விழாவில் பேசிய ரங்கசாமி அரசு பொறியியல் கல்லூரியாக இருந்த இந்த கல்லூரி தற்போது தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக மாறியது பெருமை அளிப்பதாக கூறினார்.
தொழில்நுட்ப கல்லூரியில் பயிலும் மாணவர்கள் வேலைக்கு செல்வதோடு நின்றுவிடாமல் ஆராய்ட்சி பணிகளிலும் ஈடுபட வேண்டும் என தெரிவித்தார். மேலும், புதுச்சேரியில் மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.
