Connect with us

மாணவர்களுக்கு திங்கட்கிழமை பள்ளிகள் திறப்பு-ஏற்பாடுகள் என்னென்ன?

School Children in TamilNadu

தமிழகம்

மாணவர்களுக்கு திங்கட்கிழமை பள்ளிகள் திறப்பு-ஏற்பாடுகள் என்னென்ன?

கடந்த மாதம் இறுதி வரை நம் தமிழகத்தில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரசு பொது தேர்வு நடைபெற்றது. ஆயினும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு மே இரண்டாவது வாரத்திலேயே கோடைகால விடுமுறை விடப்பட்டன.

இந்த நிலையில் திங்கட்கிழமை அவர்களுக்கு அடுத்த ஆண்டிற்கான வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. அதற்கான ஏற்பாடுகள் பற்றிய சில தகவல்களை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

அதன்படி வரும் திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் முன்னேற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. விலையில்லா பாடப் புத்தகங்கள், சீருடைகள், நோட்டுகள் அனைத்தும் திங்கள்கிழமை விநியோகம் செய்யப்படும் என்றும் கூறியுள்ளது.

ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்படும் நாளன்றே பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை கூறியது. வர்ணம் பூசுதல், சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top