
தமிழகம்
திங்கட்கிழமை காலை 10 மணிக்கு பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு..!!
நம் தமிழகத்தில் எந்த ஒரு கல்வி ஆண்டிலும் இல்லாத வகையில் கடந்த கல்வியாண்டில் அரசு பொதுத்தேர்வுகள் மே மாதத்தில்தான் தொடங்கி முடிந்தது. மேலும் அதற்கான முடிவுகள் இந்த மாதத்தில் வெளியானது.
மேலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 11 மாணவர்கள் தேர்வு முடிவுகள் வரும் 27ம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகிறது என்று அரசு தேர்வுகள் இயக்ககம் கூறியுள்ளது. பதினோராம் வகுப்பு முடிவுகள் வரும் திங்கட்கிழமை வெளியாக உள்ளதாக அரசுத் தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.
www.tnresults.nic in, www.deg.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அரசுத் தேர்வுகள் துறை கூறியுள்ளது. இதனால் மாணவர்களிடையே எதிர்பார்ப்புகள் அதிக அளவில் மிகுந்துள்ளது.
