
செய்திகள்
மீண்டும் லைவ் வரும் நித்தியானந்தா!! எப்போது தெரியுமா?
நித்தியானந்தா அவ்வப்போது இணையதளத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து வந்த நிலையில் கடந்த சில தினங்களாக ஆன்லைனில் தகவல் கொடுக்காததால் அவர் எங்கே என்ற கேள்வி நெட்டிசன்கள் மத்தியில் எழுந்தது.
அப்போது திடீரென சமாதியில் இருப்பதாகவும் தனக்கு ஏகப்பட்ட மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதாகவும் கருத்து பதிவிட்டு இருந்தார். இதனால் அவர் இறந்து விட்டதாகவும் ஒரு பக்கம் இணையத்தில் தகவல் கசிந்தது.
இந்த சூழலில் வருகின்ற 13-ஆம் தேதியில் நேரலையில் பேசவுள்ளதாக கைலாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே விரைவில் திரும்புவேன் என பலநாட்களாக கூறி வந்த நித்தியானந்தா இன்னும் திரும்பிய பாடில்லை.
குறிப்பாக கோமாவில் இருக்கிறார், சிறுநீரகம் இழப்பு என செய்திகள் உலா வந்த நிலையில் வருகின்ற ஜூலை 13-ம் தேதி குரு பெளர்ணமி அன்று நேரலையில் நித்தியானந்தா பேசவுள்ளதாக கைலாசா இணையத்தளப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த சில நாட்களாக நித்தியின் வதந்திகளுக்கு நேரலையில் வந்தால் மட்டுமே பதில் கிடைக்கும் என கூறுகின்றனர் நெட்டிசன்கள்.
