தமன்னாவுடன் நடித்து பெயர் எடுத்த நடிகர்.. சிறந்த வாய்ப்புக்காக 15 ஆண்டுகளாக ஏங்கி நிற்கும் பிரபலம்..

திரைப்படங்களை பெரிய நட்சத்திரங்களுக்காக நாம் திரையரங்குகளுக்கு சென்று கொண்டாடினாலும் அவர்களின் நண்பர்களாக வரும் கதாபாத்திரங்கள் கூட நம்மை பெரிய அளவுக்கு மனம் கவர செய்யும். அந்த வகையில் தமிழ் சினிமாவில் முக்கியமான ஒரு நடிகராக இருப்பவர் தான் வினோத். ’கல்லூரி’ படத்தில் இவர் நடிகராக அறிமுகமானதால் கல்லூரி வினோத் என்று அழைக்கப்படுகிறார்.

இருப்பினும் இந்த 15 ஆண்டுகளில் இவருக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். தமன்னா, அகில் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான கல்லூரி திரைப்படம், பலரையும் உணர்ச்சி பொங்க வைத்திருந்த படைப்பாகும். இதில், கல்லூரி மாணவனாக வரும் வினோத், ஏங்க, நீங்க சொல்லுங்க என இன்னொரு நடிகருடன் செய்த காமெடி காட்சிகள், அவரை மக்களிடம் எளிதாக கொண்டு சேர்த்தது.

இவர் ஒரு சில படங்களை தவிர சின்ன சின்ன கேரக்டர்களில் மட்டுமே பெரும்பாலும் நடித்து வருகிறார். என்பதும் இவரது திறமைக்கேற்ற கேரக்டர் இன்னும் கிடைக்கவில்லை என்பதும் தான் கோலிவுட் திரை உலகினர் பலரின் கருத்தாக உள்ளது. கல்லூரி படத்திற்கு பிறகு சுந்தர் சி இயக்கத்தில் உருவான ’கலகலப்பு’ என்ற திரைப்படத்தில் பிக் பாக்கெட் செய்யும் ஒரு நபராக நடித்திருப்பார். நாயகி அஞ்சலியிடம் பிக்பாக்கெட் செய்துவிட்டு ஓடிவிடும் காட்சி கலகலப்பாக இருக்கும்.

kalloori vinoth1

இதனை அடுத்து அவர் மகேந்திரன் நடித்த ’விழா’ மற்றும் ’சுண்டாட்டம்’ போன்ற படங்களில் நடித்த நிலையில் மாரி படத்தில் இவருக்கு ஒரு திருப்புமுனை கேரக்டர் கிடைத்தது. அதில் அவர் தனுஷின் அடியாள்களில் ஒருவராக நடித்தார். இந்த படம் கொடுத்த பிரபலம் காரணமாக அவருக்கு மேலும் சில படங்கள் ஒப்பந்தம் ஆகின. ’எனக்கு வாய்த்த அடிமைகள்’ ’பிச்சுவாகத்தி’ ’ஸ்கெட்ச் ராஜா’ போன்ற படங்களில் நடித்தார்.

இதனை அடுத்து மாரி படத்தின் இரண்டாம் பாகத்திலும் முதல் பாகத்தில் நடித்த அதே கேரக்டரில் வினோத் நடித்தார். அதன் பின்னர் விஜய் சேதுபதி நடித்த ’சங்கத்தமிழன்’ என்ற திரைப்படத்தில் முத்து என்ற கேரக்டரில் நடித்தார்

மாரி படத்துக்கு அடுத்து வினோத்துக்கு பெயர் வாங்கி கொடுத்த பணம் என்றால் அது ’பிழை’ என்ற படம் தான். ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான இந்த படத்தில் கல்லூரி வினோத், சரவணா என்ற கேரக்டரில் நடித்திருப்பார். குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கலந்த இந்த கேரக்டரில் அவர் நடித்து அசத்திருப்பார்.

kalloori vinoth2

இதனை அடுத்து அவர் ராய் லட்சுமி நடித்த ’சிண்ட்ரெல்லா’, தெற்கத்திக் கள்ளன் ஆகிய படங்களில் நடித்தார். சமீபத்தில் வெளியான ’அயோத்தி’ திரைப்படத்தில் துரை என்ற கேரக்டரில் நடித்து அசத்திருப்பார். அதன் பின்னர் ’ராயர் பரம்பரை’ ’ராரா சரசுக்கு ரா ரா’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் வினோத் தனக்கேற்ற கேரக்டர் வந்தால் தன்னாலும் திரை உலகில் சாதிக்க முடியும் என பதினைந்து ஆண்டுகளாக நம்பிக்கையுடன் காத்திருக்கிறார். நிச்சயம் அவருக்கு திருப்புமுனை கொடுக்கும் கேரக்டர் வரும் என்றும் அவரது திரையுலக பயணமும் உச்சத்திற்கு செல்லும் என்றும் கூறப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.